செய்தியாளராக தொடர்பு கொள்ளவும் NEWS@TAMILSUNITY.COM
புதிய தலைப்புக்கள்

விண்வெளிக்குப் புறப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறிய ரொக்கெட்!!

Written By PROUDLY ADMIN on Tuesday, June 30, 2015 | 12:14 PM

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கெனாவரல் ரொக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்ட ரொக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பால்கான் 9 ரொக்கெட், நேற்று மதியம் ஏவப்படுவது அந்நிறுவனத்தின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. கவுண்ட் டவுண் முடிந்ததும் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக ரொக்கெட்டின் முதல் பகுதி பிரிவதற்கு முன்பாகவே அது நடுவானில் வெடித்துச் சிதறியது. இதனால் நேரடி ஒளிபரப்பு கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் அமைதியானது.
அதற்குப் பின்னர் ரொக்கெட்டுடனான வீடியோ தொடர்பு செயலிழந்துவிட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு வடமாகாண அவைத் தலைவர் கடிதம்!!

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்துப் பேசினார் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
விசாரணைகள் எதுவும் செய்யாமல் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யமுடியாதென்றும் இரண்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தன்னிடம் தெரிவித்தார் என்றும் சீ.வீ.கே. சிவஞானம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரிடமும் தாம் தெரியபடுத்தியுள்ளார் எனவும் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தி கடிதம் ஒன்றை அவரிடம் கையளித்தனர் என்றும் – வவுனியா அரச அதிபர் இடமாற்றம் தொடர்பில் தான் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் பிரதமர் அவர்களிடம் கூறினார் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்

ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!!

எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிடிவிட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது தேசிய புலனாய்வுத்துறை அதிரடி நடவடிக்கை


மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், அதிரடியாக கைது செய்தனர்.

மணிப்பூரில் இம்மாதம் 4–ந்தேதி ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் மீது நாகலாந்து கிளர்ச்சி படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாகா தீவிரவாதிகள் மியான்மர் நாட்டுக்குள் புகுந்து தப்பினர். ராணுவ வீரர்கள் மீது நாகா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் மியான்மர் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி 100 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

இந்திய ராணுவ வீரர்கள் மீது நாகா தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வுத்துறையினர் நேற்று இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நாகா தீவிரவாத அமைப்பை சேர்ந்த மண்டல கமாண்டரான 40 வயது கும்லோ அபி அனல் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது கைது தேசிய புலனாய்வுத்துறையினருக்கு முக்கிய திருப்பமாக அமைந்து உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின்போது நாகா தீவிரவாதிகள் 3 குழுக்களாக வந்து தாக்குதல் நடத்தியதும், அவர்களின் 14 பேர் யார்? என்பது குறித்தும் தெரியவந்துள்ளது. 

ரூ.206 கோடி ஊழல் புகார்: பங்கஜா முண்டே மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு

ரூ.206 கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி பங்கஜா முண்டே மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பங்கஜா முண்டே மீது புகார்

மராட்டியத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான கடலை மிட்டாய், பாய், மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.206 கோடி வரையிலான ஒப்பந்தங்களை டெண்டர் இன்றி ஒரே நாளில் அனுமதித்ததாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி பங்கஜா முண்டே ஊழல் புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி பங்கஜா முண்டே, இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு புனேயை சேர்ந்த ஹேமந்த் பாட்டீல் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடலை மிட்டாயில் களிமண்

அதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவையின்கீழ் அகமத்நகர் மாவட்டத்துக்கு வினியோகிக்கப்பட்ட கடலை மிட்டாயில், களிமண் கலவை இருந்ததாக அந்த மாவட்ட பஞ்சாயத்திடம் இருந்து ஏற்கனவே பங்கஜா முண்டே எழுத்துப்பூர்வமான புகாரை பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாவை நினைந்து பாடி அசத்திய மைத்திரி….

ஜனாதிபதி மைத்தரிபால அண்மையில் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்ற சமயத்தில், அங்கு படையினர் மத்தியில் பாடலொன்றை பாடி அசத்தினார். தனது அம்மாவை நினைத்து அவர் பாடிய பாடலிது.

சிறுவனை துஷ்பிரயோகம் செய்தவர் கைது


15 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் திருமணமான ஒருவரைக்கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் தாய் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகன் வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அங்கு வந்துள்ள சந்தேக நபரான தமக்கு நெருக்கமான ஒருவர் மகனின் கைகளைக் கட்டி விட்டு இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுவனின் தாய் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

“EU” தடையால் இலங்கை மீனுக்கு வந்த நிலை.

சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2014 ஒக்ரோபர் மாதத்தில் இருந்து சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி, 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் 23.9 மில்லியன் டொலருக்கு கடலுணவு ஏற்றுமதி செய்த சிறிலங்கா, இந்த ஆண்டில், 14.1 மில்லியன் டொலர் கடலுணவு ஏற்றுமதி வருவாயையே பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான கடலுணவு ஏற்றுமதி, 68.3 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை, கடந்த ஜனவரி 13ஆம் நாளில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

2013ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 74 மில்லியன் டொலருக்கு கடலுணவுப் பொருட்களை சிறிலங்கா ஏற்றுமதி செய்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினால் சிறிலங்கா சுமார் 100 மில்லியன் டொலர் ஏற்றுமதி வாய்ப்பை இழந்துள்ளது.

பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது:இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது.

ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை

யாழ் உரும்பிராயில் சுவிஸ் மாப்பிளைக்கு வயது 45…! மாமிக்கு வயது 35.


சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள 45 வயதுடையவருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதாலும் மணப்பெண்ணின் சகோதரரை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுவதாகவும் கொடுத்த வாக்குறுதியையும் அடுத்து இந்தத் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்ததாக தெரிய வருகின்றது.

இதில் உள்ள சுவாரசியமான விடயம் என்னவெனில் மணப்பெண்ணின் பெற்றோருக்கு மணமகனின் வயதை விட மிகக் குறைந்த வயது என்பதேயாகும்.

மணப்பெண்ணின் தாயுக்கு அவரின் மருமகனின் அதாவது அவரின் மகளின் கணவனின் வயதை விட 10 வயது குறைவாகும்.
இத்திருமணம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இன்று இன்று (29) நடந்துள்ளது. யாழ்ப்பாணம் முன்னேறிடும்…!!

பிள்ளையானின் சகா அம்பாறையில் கூட்டமைப்பில்…..


வட-கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் எதிர்வரும் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு 18 ஆசனங்களை பெறும் என்றும் அதில் 4, அல்லது 5 ஆசனங்களாவது மகிந்தவின் பக்கம் செல்வதற்கு தயாராக இருப்பதாக புலனாய்வு செய்தியாளர் லசந்த கலப்பதியின் தகவலில் இருந்து அறியக்கடைக்கிறது.

இச்சம்பவமானது த.தே.கூட்டமைப்பின் எத்தனை தலைவர்களுக்கு தெரியுமோ தெரியாது இன்று தமிழ்த்தேசியம் பேசிகொண்டு திரியும் அரைக்கரவாசிப்பேர் தென்னிலங்கையில் பல மில்லியன் ரூபாய்க்களை பெற்றவர்கள் என்பதனையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவரைப்போன்றவர்தான் அம்பாறையில் தன்னை படித்தவர் என்று காட்டிக்கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும் கருணா, பிள்ளையானின் அடியாளான கணேஸ் மகிந்தவின் பக்கம் பாய்வதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் கருணா மூலம் மேற்கொண்டு விட்டே தேர்தல் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர்களைப்போன்றே முல்லைத்தீவிலும், யாழ்ப்பானத்திலும் இருவர் மகிந்தவின் அடியாட்களாக களத்தில் இறங்கி இவர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றதன் பின்னர் மகிந்தவின் பக்கம் சென்று சகல சுகபோகங்களையும் அனபவிப்பதோடு த.தேசியத்தை விலைபேசிகின்ற அளவிற்கு இவர்களது செயற்பாடுகள் அமையிருப்பதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளீரணியின் சிரேஸ்ர தலைவி அன்னம்மா தமது கட்சி மேலிடங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் மீண்டும் ஒரு பியசேனவை இந்த மண்ணில் பிறக்க விடமாட்டேன் என தொலைபேசி வாயிலாக கட்சி முக்கியஸ்தரிடம் தெரியப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் குழப்பமான நிலை தொடர்வதாக புலனாய்வு செய்தியாளர் கலப்பதி மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட மகளீரணியின் சிரேஸ்ர தலைவி அன்னம்மா மேலும் குறிப்பிட்டதாவது எதிர்வரும் நாட்களில் இவரது உண்மைத்தன்மைகள் கட்சியில் யாருடன் நெருங்கிய தொடர்பு என்பதை ஒரு சில நாட்களில் வெளியிட உள்ளதாகவும் எது புலனாய்வுச் செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரது கடந்த கால செயற்பாடுகள் ஒன்றும் தமிழ் மக்கள் சாந்தது அல்ல மாறாக சிங்கள அரசு புலனாய்வுத் துறை ஆயுதக் குழுக்கள் சார்ந்தது அமைந்திருந்தது இவரை நம்பினால் என்ன நடக்கும் என்று சிந்திப்பது நல்லது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் குறிப்புகள்

மருத்துவக் குறிப்புகள்

 

Copyright © 2015. TAMILSUNITY - All Rights Reserved

PROUDLY EDITED AND DESIGNED BY SITE ADMIN